» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக மூத்த நிர்வாகியிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:05:31 AM (IST)

ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை செல்போனில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினார். அப்போது கனிமொழி எம்.பி., செல்போன் மூலம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு சக்திவேலிடம் பேசுமாறு கூறினார்.
இதையடுத்து, சக்திவேலிடம் முதல்வர் உடல் நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










