» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சனி 12, ஜூலை 2025 3:33:43 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி ஆக.14ம் தேதி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம், வரும் 15ம் தேதி, துவங்க உள்ளது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மண்டலம் 

15.07.2025 (வார்டுகள் 21,22,23) - ஆனந்தா மஹால், அழகேசபுரம்

16.07.2025 (வார்டுகள் 24,25,26) - செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி, பீச் ரோடு

17.07.2025 (வார்டுகள் 27,28,39) - சத்திரம் தெரு, அறிஞர் அண்ணா மண்டபம்

18.07.2025 (வார்டுகள் 29,38,41) - அபிநயா திருமண மண்டபம், சிவந்தாகுளம் ரோடு

22.07.2025 (வார்டுகள் 40,46,47) - சமுதாய கூடம், பாத்திமா நகர்

மேற்கு மண்டலம் 

23.07.2025 (வார்டுகள் 15,16,17) - லியோ பள்ளி, பி & டி காலனி

24.07.2025 (வார்டுகள் 18,19,31) - பிஎம்சி மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம்,

25.07.2025 (வார்டுகள் 32,33,34) - தங்கம் நடுநிலைப்பள்ளி, அண்ணாநகர் 10வது தெரு,

29.07.2025 (வார்டுகள் 35,37,42) - சிவந்தி ஆதித்தனார் பள்ளி, தாமோதரநகர்

30.07.2025 (வார்டுகள் 30,36,44) - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, டூவிபுரம் 11வது தெரு 

வடக்கு மண்டலம் 

31.07.2025 (வார்டுகள் 2,14)  - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அய்யாசாமி காலனி

01.08.2025 (வார்டுகள்  11,12,3) - ஆர்.சி. பெத்தானி நடுநிலைப்பள்ளி, கந்தசாமி புரம்

06.08.2025 (வார்டுகள் 13,20,1) - தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி, போல்போட்டை

07.08.2025 (வார்டுகள் 4,5,10,9) - செயின்ட் தாம்மஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, இன்னாசியார்புரம்

08.08..2025 (வார்டுகள் 6,7,8) - ஆக்சிலியம் மேல்நிலைப்பள்ளி, திரேஸ்புரம்

தெற்கு மண்டலம் 

12.08.2025 (வார்டுகள் 43,45,48) - காமராஜ் கல்லூரி

13.08.2025 (வார்டுகள் 49,50,51,60) - திரு.குடும்பம் நடுநிலைப்பள்ளி கால்டுவெல் காலனி

14.08.2025 (வார்டுகள் 52,53,54) - K.T.K மேல்நிலைப்பள்ளி, முத்தையாபுரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சேவைகள் கிடைக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். அதன் ஒரு பகுதியாக உங்களுடன் ஸ்டாலின் என்ற முன்னெடுப்பு தற்போது நமது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. ஆகவே பொதுமக்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 


மக்கள் கருத்து

Jul 17, 2025 - 09:44:26 AM | Posted IP 162.1*****

எந்த பயனும் இல்லை

GayathriJul 15, 2025 - 10:47:52 AM | Posted IP 104.2*****

Thank you for the scheme.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory