» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள்: ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார்
சனி 12, ஜூலை 2025 3:09:46 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலை பள்ளியில் நுண்கலைகள் மற்றும் இசைக்கருவி வகுப்புகளின் புதிய கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான 10 லட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவிகள் வகுப்புக்கான புதிய கட்டிடமும்,பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் 26 லட்சம் மதிப்பீட்டிலான நுண் கலைகள் வகுப்புக்கான பொ சூசையம்மாள் நினைவு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை வகித்தார்.முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி,பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவன உரிமையாளர் பொன்னுசாமி,லிபர்டி நிறுவனங்களின் உரிமையாளர் எஸ்.எஸ் டி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமையாசிரியர் ஜெயலதா அனைவரையும் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து நுண்கலை மாணவர்களின் நடனத்தையும், இசைக்கருவி வாசிக்கும் மாணவர்களையும் கண்டு ரசித்து பாராட்டினார், புதிய கட்டிடங்களுக்கு நன்கொடை வழங்கிய பொன்னூஸ் நேச்சுரல் ஸ் உரிமையாளர் பொன்னுசாமி, லிபர்டி நிறுவன உரிமையாளர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு. நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இதில் நகர்மன்ற சேர்மன் கருணாநிதி,மாவட்ட கல்வி அலுவலர்கள்,மரிய ஜான் பிரிட்டோ, சேகர்,பள்ளி மேலாண்மை குழு தலைவி ரெங்கம்மாள்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜலட்சுமி,நகர் மன்ற உறுப்பினர்கள் உலகு ராணி,சித்ராதேவி உள் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை உஷாராணி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










