» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
சனி 12, ஜூலை 2025 12:31:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையங்களை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளுக்கான தொகுதி - IV தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்குட்ப்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
மேலும், இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37000க்கும் மேற்பட்டோர் தேர்வுகள் எழுதினர். குரூப் 4 தேர்வு மையங்களான எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தேர்வினை கண்காணிப்பதற்காக 31 நடமாடும் குழுக்களும், 14 பறக்கும் படை குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், தேர்வு அறையில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)










