» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : தம்பதி கைது
சனி 12, ஜூலை 2025 7:48:21 AM (IST)
திருச்செந்தூர் அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி கஸ்பாவை சேர்ந்த நாகராஜ் மனைவி பகவதி. சம்பவத்தன்று பகவதி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட ஒரு பெண் பகவதி வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதனால் உனக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அவர், அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்துள்ளார். அந்த பெண் கூறியவாறு ஒரு தம்ளர் தண்ணீரில் 5½ பவுன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் மந்திரம் சொல்வது போல் சொல்லிவிட்டு, பகவதியின் முகத்தில் குங்குமத்தை வீசி விட்டு, தம்ளரில் இருந்த 5½ பவுன் தாலி சங்கிலியுடன் வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஏரல் அருகில் சூளைவாய்கால் பகுதியை சேர்ந்த விமலா (27), அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் விஜய் (28) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 5½ பவுன் செயினையும் மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










