» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
வெள்ளி 23, மே 2025 10:36:45 AM (IST)

அமலாக்கத்துறை சோதனை என்பதுபுதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜனவரி மாதம் கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும். அமலாக்கத்துறை சோதனை என்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவும் ஊழலாகவும் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. ஆயிரம் ரூபாய் திட்டம் என மூளை சலவை செய்து பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்கிறது என்றார்.
மேலும், அதிமுகவினர் குறித்து பாஜகவினர் விமர்சிக்க கூடாது என்று பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "கூட்டணி என்று அமைத்த பிறகு அதற்குள் சலசலப்பு வந்து விட்டால் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கருத்துக்கள் சொல்வதை கட்டுப்படுத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










