» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணி நிறைவு: எஸ்பி வாழ்த்து
வியாழன் 1, மே 2025 10:49:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணி ஓய்வுபெற்றுள்ள 2 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவு-II காவல் துணை கண்காணிப்பாளர் சிவராஜ்பிள்ளை மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சந்தனக்குமார் ஆகிய இருவரும் நேற்று பணி ஓய்வு பெற்றனர். மேற்படி இருவரும் 1988 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து பதவி உயர்வுகள் பெற்று பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி பணி நிறைவு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், மாவட்ட குற்றப்பிரிவு-I காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










