» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:42:03 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 254 விசைப்படகுகள், வேம்பாரில் உள்ள 33 விசைப்படகுகள், தருவைகுளத்தில் உள்ள 280 விசைப்படகுகள் ஆக மொத்தம் 567 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுநீக்குதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அறிவிக்கப்படும் நிலையில், மேற்கு கடற்கரையை சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிப்பதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடு, இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பரபரப்பு புகார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 7:57:14 PM (IST)

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:46:28 PM (IST)

தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:32:51 PM (IST)

கலைஞர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கற்கலாம்
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:15:09 PM (IST)

தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:31:37 AM (IST)

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)
