» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:03:54 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. மேலும் இரவு முழுவதும் நீடித்த சாரல் மழையால், சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் கோடை வெப்பம் சற்று தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி: நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!
புதன் 16, ஏப்ரல் 2025 8:32:03 AM (IST)

மாட்டு தொழுவத்தில் கன்று குட்டி திருடிய வாலிபர் கைது : மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
புதன் 16, ஏப்ரல் 2025 8:28:18 AM (IST)

தூத்துக்குடியில் போதை பொருள் வைத்திருந்தவருக்கு 14 ஆண்டு சிறை : மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 16, ஏப்ரல் 2025 8:24:37 AM (IST)

பண்ணைக் குட்டைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 16, ஏப்ரல் 2025 8:20:22 AM (IST)

அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம்: சில்லறை பிரச்சனைக்கு தீர்வு!
புதன் 16, ஏப்ரல் 2025 8:05:26 AM (IST)

மாடியிலிருந்து தவறி விழுந்து பரோட்டா மாஸ்டர் பலி
புதன் 16, ஏப்ரல் 2025 8:02:29 AM (IST)
