» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பண்ணைக் குட்டைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 16, ஏப்ரல் 2025 8:20:22 AM (IST)
விளாத்திகுளம் வட்டாரத்தில் விவசாயிகள் இலவசமாக பண்ணைக் குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் விவசாயம் செய்து வரும் விவசாமிகள் தங்களின் சொந்த விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் இலைசமாக பண்ணைக் குட்டைகள் அமைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. மேலும் விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் விண்ணப்பத்தினை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடமும் கொடுக்கலாம்.
இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் பண்ணைக் குட்டைகளை இலவசமாக அமைத்துக்கொள்ளலாம். பண்ணைக் குட்டைகளி அமைப்பதால் வீணாகும். மழை நீர் சேமிக்கப்பட்டு மானாவாரி பயிர் சாகுபடியில் மழையில்லாத பருவத்தில் பயிருக்கு நீர் பாசனம் செய்ய பயன்படுகிறது. மேலும் மழைநீரானது சொந்த வயலிலேயே சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரிக்கப்படுகிறது மற்றும் மணி அரிப்பு தடுக்கப்படுகிறது.
எனவே விளாத்திகுளம் வட்டார விவசாமிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் இலவசமாக பண்ணைக் குட்டைகள் அமைக்க அதற்கான விண்ணப்பத்துடன் பட்டா நகல், அடங்கள், ஆதார் அட்டை நகல், புகைப்படம், சிறு, குறு விவசாமி சான்று மற்றும் சாதிச் சான்று ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










