» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம்: சில்லறை பிரச்சனைக்கு தீர்வு!
புதன் 16, ஏப்ரல் 2025 8:05:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகம் செய்யப்படுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநர்களிடையே சில்லறை தொடர்பாக வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும்வகையில், டிஜிட்டல் முறையிலான பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கியூஆர் கோடு அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் இப்பரிவர்த்தனையை போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் நேற்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெபிட், கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்தோ, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ, ஜிபே, போன் பே போன்ற செயலிகள் மூலமாகவோ பணம் செலுத்தி, நடத்துநரிடம் பயணச்சீட்டு பெறலாம் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










