» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போதை பொருள் வைத்திருந்தவருக்கு 14 ஆண்டு சிறை : மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 16, ஏப்ரல் 2025 8:24:37 AM (IST)

தூத்துக்குடியில் போதை பொருள் வைத்து இருந்தவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி கடந்த 25.07.2018 அன்று அப்போதைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி மற்றும் போலீசார் தூத்துக்குடி மணல் தெருவில் உள்ள ஜெயரீஷ் என்பவர் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8.840 கிலோ கஞ்சா எண்ணெய், 9.146 கிலோ சாரஸ் ஆகிய போதை பொருளை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயரீஷ், அசோக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணையின் போது அசோக் தலைமறைவாக இருந்ததால் வழக்கு இரண்டாக பிரித்து விசாரணை நடத்தப்பட்டது. 

அதன்படி ஜெயரீஷ் மீதான விசாரணை கடந்த 26.03.24 அன்று முடிக்கப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அசோக் கடந்த 13.11.2024 அன்று கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமார், குற்றம் சாட்டப்பட்ட அசோக்குக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory