» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குட்கா, பான் மசாலா கடத்தி வந்த டீக்கடைக்காரர் கைது
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:00:48 AM (IST)
தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில், மதுரை பைபாஸ் ரோடு ஸ்டெர்லைட் பாலம் அருகில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5.75 கிலோ கணேஷ் புகையிலை, 975 கிராம் விமல் பான் மசாலா இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர் மகன் அண்ணாதுரை (52) என்பதும், இவர் மீள விட்டானில் டீக்கடை நடத்தி வருவதும் அங்கு வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அண்ணாதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)
