» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொன்மையான ஓலை சுவடியில் தமிழர் வரலாறு, இராமாயணம் குறிப்புகள்!

திங்கள் 31, மார்ச் 2025 8:38:38 AM (IST)



தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட தொன்மையான ஓலை சுவடியில் இராமாயணம் குறித்த குறிப்புகளோடு தமிழர்களின் வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தினை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி மறைந்த - அளவர் குலம் - காந்தி அப்பாவு (எ) முத்தும் பெருமாள் ஆவார். இவரது பிறப்பு ஆண்டு 1896 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அன்னாரின் வாரிசுகள் வீரலட்சுமி (77),  சண்முகம் பெருமாள் (72), இராமலட்சுமி(68), 4. குமாரசாமி (65) என்பவர்கள் ஆவார்கள். 

1969ல் அன்னாரின் இறப்பிற்குப் பின்னர் குடும்பத்தினர்கள் தூத்துக்குடி வந்தடைந்தார்கள் என்றும் அதுசமயம் நீண்ட காலமாக தங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த சுமார் 550மி.மீ         (1’ 10”) நீளமும், 25மி.மீ(1”) அகலமும் கொண்ட தொன்மையான பனை ஓலை சுவடிகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை எடுத்து வந்து பாதுகாத்து வந்தனர். 

அதனை முழுமையாக முறையாக ஆய்வு செய்து அதில் அடங்கியுள்ள தமிழர்களின் வரலாறு என கருதப்படும் உண்மை உலகுணர செய்திடும் விதமாக அன்னாரின் வாரிசான சண்முக பெருமாள்(72) அவர்களால் தன்னிடம் ஒப்படைக்க பட்டது எனவும் அவர் குல(அளவர் குலம்) பரம்பரையினை சேர்ந்த காலஞ்சென்ற  அரி ராஜகோபால் என்பவர் சுவாமி தோப்பு - அய்யா பதி அருகில் அமர்ந்து தனது கரங்களால் எழுத்தாணி கொண்டு சிறிய ஓலை சுவடிகள் எழுதுவதை தான் 1962-63  ஆண்டு காலகட்டத்தில் கண்டதாகவும், 

மேலும் தங்கள் முன்னோர்கள் அய்யா வைகுண்டர் உடன் சேர்ந்து சமுதாய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் தங்கள் வரலாறு தரவுகளை பதிவு செய்துள்ளார் என்றும் எனவே இத்தகைய ஓலைச்சுவடிகள் எழுதும் பாரம்பரியம் கொண்ட இவர்கள் வாயிலாக தன்னை வந்தடைந்துள்ள இவற்றினை புகைப்படங்கள் எடுத்து மென் ஆவணங்கள் ஆக்கி அட்டவணை படுத்திய பின்பு முறையாக மாவட்ட ஆட்சியர் வாயிலாக வரலாறு மற்றும் தொல்லியல் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படும் என்ற விபரத்தையும் பதிவு செய்தார். 



குறிப்பாக இந்த சுவடில் இராமாயணம் குறித்த வாசகங்கள் தென்படுகிறது என்றும் மொத்தம் 140 எண்கள் வரை குறிப்பிடப்பட்டுள்ள ஓலைகள் உள்ளன என்றும் சுமார் 10 ஓலைகள் 40 சதவீதம் வரை சேதப்பட்டுள்ளன என்றும் பெரும்பாலான ஓலைகள் 90 சதவீதம் வரை படிப்பதற்கு ஏதுவாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education






Thoothukudi Business Directory