» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெங்களூரில் இருந்து பார்சலில் வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது!
சனி 29, மார்ச் 2025 4:43:12 PM (IST)
பெங்களூரில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பார்சல் நிறுவனம் மூலமாக வந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் காட்டுப்பகுதியில் நேற்று இரவு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் ஆட்டோ ஒன்று பார்சல்களை டெலிவரி செய்ய சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவரின் உத்தரவின் பேரில் காவல்துறை தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் செல்லத்துரை, சுரேஷ் அருண் விக்னேஷ் ஆகியோர் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற போது அந்த ஆட்டோவில் இருந்து இரண்டு பார்சல்கள் கோவில்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்த பிரான்சிஸ் ஜோஸ் என்பவருக்கு டெலிவரி செய்துள்ளனர்.
பின் தொடர்ந்து சென்ற போலீசார் அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பிரான்சிஸ் ஜோசுவை கைது செய்தனர் இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் பார்சல் நிறுவனம் மூலமாக தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக பூத் கமிட்டி பணி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 10:11:13 AM (IST)

தந்தை விஷம் குடித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: குடும்ப பிரச்சினையில் சோகம்
புதன் 2, ஏப்ரல் 2025 8:13:54 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணி மூலம் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி
புதன் 2, ஏப்ரல் 2025 8:11:48 AM (IST)

ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதன் 2, ஏப்ரல் 2025 8:08:11 AM (IST)

விவசாயியிடம் செல்போன் திருட்டு: 3பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:53:48 AM (IST)

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:50:05 AM (IST)
