» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம்? பொதுமக்கள் புகார்

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:04:06 PM (IST)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்தல், பெயர் மாற்றம் செய்தல் தவணை கொள்முதல் ரத்து செய்தல் போன்ற காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் அரசு சார்பாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

மேலும் smart card fees என தனியாக ரூபாய் 200, postal fees ரூபாய் 50ம் பெறப்படுகிறது . எனினும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்திற்காக பதிவுச் சான்றிதழ் கிடைக்கப்படாமல் உள்ளன. எனவே இதனை கவனத்தில் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory