» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு!

திங்கள் 10, பிப்ரவரி 2025 4:45:54 PM (IST)

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சி.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்(UPU) ஒன்பது முதல் பதினைந்து  (9-15) வயதுடைய இளம் தலைமுறையினர் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கடிதங்களை எழுதி அற்புதமான பரிசுகளை வெல்ல ஊக்குவித்து வருகிறது. 

இந்த 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "உங்களை கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒருவருக்கு கடிதமாக எழுதுங்கள்”. கடிதம் ஆங்கிலம்/ இந்தி/ தமிழ் அல்லது நமது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட  மொழியில் மேற்கண்ட தலைப்பில் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதலாம். 

கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கடிதத்தை முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம்,  சென்னை 600002 என்ற முகவரிக்கு எழுதப்பட்டு  தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், தூத்துக்குடி 628001 என்ற முகவரிக்கு உங்கள் பள்ளி மூலமாக அனுப்ப வேண்டும். சிறப்பான முதல் மூன்று கடிதங்கள் தமிழ்நாடு வட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இந்திய அளவில் முதல் சிறந்த மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்படும். 

இந்த போட்டியில் வெற்றி பரிசுத்தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும் மூன்றாம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

முதல் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் கடிதம் இந்தியா சார்பில் சர்வதேச அளவிலான போட்டிக்கு  அனுப்பப்படும். பின்னர் உலக அளவில் முதல் இடம் பெறும் கடிதத்தை எழுதிய பங்கேற்பாளர் சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு வணிக மேலாளரை 9942693129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சி.முருகன் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education



New Shape Tailors





Thoothukudi Business Directory