» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
திங்கள் 10, பிப்ரவரி 2025 3:56:26 PM (IST)

தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 28வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் ஜி. பால்கனி வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஐ. ஜோசப் ஜான் கென்னடி அறிமுக உரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டக் கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) டி. சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு 'இயற்கையின் தாளம்' என்ற கருப்பொருளை மாணவர்கள் பாடல்கள், நடனம் மற்றும் குறும்படங்களுடன் வெகு சிறப்பாக நிகழ்த்தினர். மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வண்ணமயமான நிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. விழாவில் தலைமையாசிரியை பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் ஜேன் மேத்யூ நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வெள்ளி 14, மார்ச் 2025 8:35:36 AM (IST)

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:13:10 AM (IST)

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)
