» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கண் பரிசோதனை முகாம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

திங்கள் 10, பிப்ரவரி 2025 12:29:05 PM (IST)



தூத்துக்குடியில் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள SCAD திட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் கண்புரை சிகிச்சை, கண் கண்ணாடி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அது தொடர்பான மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் என்டிபிஎல் தலைமை செயல் அலுவலர்  அனந்த ராமானுஜம், கூடுதல் பொது மேலாளர் (HR)  சரவணன், கூடுதல் முதன்மை மேலாளர்கள்  ரகுபதி,  சங்கர், அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அனிதா, மற்றும் மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன், துணை மேயர்  ஜெனிட்டா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர்  அன்பழகன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர்  பாலகுருசாமி, பகுதி செயலாளர்  ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர்  மூக்கையா, மாமன்ற உறுப்பினர்  வைதேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory