» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு ஊழியர்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:45:29 AM (IST)

தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாடு அறைகூவல் தீர்மானத்தின் படியும் 5 கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு முடிவின் அடிப்படையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணிநேர தர்ணா போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தொடங்கியது.
மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு ஆ.மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ந.வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் உமாதேவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியூ மாநில செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார். TNGPA மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் அ.சாம்டேனியல்ராஜ், மாநில செயலாளர் லில்லி புஷ்பம், TNPTF மாவட்டச் செயலாளர் மா.கலைஉடையார் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
