» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு 370 கோடி நிதி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு

வெள்ளி 14, மார்ச் 2025 11:18:33 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.3 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழ்நாடு 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம்-பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம்-மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம்-தெலுங்கனூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களில் உள்ள பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா) ஆகிய பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.

கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பொது சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் உள்ள 33 வெவ்வேறு தகுதிகளைக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் நீலக்கொடி சான்றினை 2025-26 ஆம் ஆண்டில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புதுப்பட்டு மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் பெற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மூத்த குடிமக்கள் நலன்: முதுமை மானுட வாழ்வின் தவிர்க்க இயலாத கட்டமாகும். தனிமை, மருத்துவ நலன் மற்றும் பொருளாதாரச் சார்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும். இந்தப் பகல்நேரப் பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமை உணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல்நேரப் பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச்சோலைகள் வழங்கும்.

சங்க காலம் தொட்டு தமிழரின் கப்பல் கட்டும் வரலாறு நீண்ட நெடிய மரபைக் கொண்டது. தமிழரின் இத்தகைய கடல்சார் மரபை மீட்டெடுத்திடவும், தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிடவும், 'தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025' ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் (Ship Hull Fabrication) மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி (Ship Engine Production) ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களைக் கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும். இந்தத் தொழிலின் வருகையின் மூலம், கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும்.

கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பொது சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் உள்ள 33 வெவ்வேறு தகுதிகளைக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் நீலக்கொடி சான்றினை 2025-26 ஆம் ஆண்டில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புதுப்பட்டு மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் பெற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory