» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை
திங்கள் 10, பிப்ரவரி 2025 10:27:21 AM (IST)
தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர், கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் மனைவி கனி (38). இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கனிக்கு 2018 ஆம் ஆண்டு வயிற்றில் புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வயிறு வலிப்பதாக கூறி சாப்பிடாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் வீட்டின் கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவன் மற்றும் பிள்ளைகள் வந்து பார்த்த பொழுது எரிந்த நிலையில் விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
