» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் : விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:28:59 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270விசைப்படகுகளில் தினமும் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மாற்று தொழில் முறையை அனுமதிக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 270 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
