» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலுக்கு ஜாதி ரீதியான உடை அணிந்து வரக்கூடாது : காவல்துறை எச்சரிக்கை

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 8:49:43 PM (IST)

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகளையோ, வர்ணங்களையோ அணிந்து வரவோ, சர்ப்ப காவடி எடுத்து வரவோ அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகின்ற 11.02.2025 அன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக குழுக்களாக வந்தவாறு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கோடாங்கிபட்டி, செய்துங்கநல்லூர், முத்தையாபுரம், ஆறுமுகநேரி ஆகிய 4 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சோதனைச் சாவடிகளில் புனித யாத்திரையின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதயாத்திரைகளின் முதுகு மற்றும் தோள்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்ட மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

மேலும் திருச்செந்தூருக்கு நடந்து செல்லும் பக்தர்கள் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்க, பக்தர்கள் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும், கோயிலை நோக்கிச் செல்லும்போது சாலையின் வலதுபுறம் நடக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருக்கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் ஜாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிந்து வரவோ, கொடிகள் கொண்டு வரவோ கூடாது, ஜாதி ரீதியான பாடல்களை இசைக்கவோ, ஒலிக்கவோ கூடாது. மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

எனவே இந்த தைப்பூசத் திருவிழாவை அமைதியாக நடத்துவதற்கு, காவல்துறையினருடன் பொதுமக்கள் ஒத்துழைத்து, சரியான நேரத்தில் வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education



New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory