» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மரம் நடும் விழா!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 1:43:42 PM (IST)

தூத்துக்குடியில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வாரம்தோறும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி இந்திய மருத்துவர்கள் சங்கம் இணைந்து மரக்கன்று நடும் விழா தூத்துக்குடி பிரையன்ட் நகர் 6வது தெருவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சரவணன் செயலாளர் சிவசைலம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரங்களை நட்டனர். 20-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் தனுஷ்கோடி, கைலாசம், நவீன், முத்தழகு, மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் கேசவன், செந்தில், கோவிந்தன், பிரபாகர், ஆசீர்வாதம், ஐயப்பன், ரகுபதி, அருள், நாராயணன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
