» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை தாக்கியதாக நண்பர்கள் 2பேர் கைது!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 11:55:47 AM (IST)
தூத்துக்குடியில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆல்வின் மகன் அச்சுதன் (20), இவர் தனது நண்பர்கள் காமநாயக்கன்பட்டி மகிமை நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் வரதராஜன் (27), தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (37) மற்றும் ஒருவருடன் பாளை., ரோடு ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பாலத்தின் கீழே அமர்ந்து மதுபானம் அருந்தினர்களாம்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சுதனை 3பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து வரதராஜ், கார்த்திக் ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
