» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கண்காணிப்பு கேமரா: அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
சனி 18, ஜனவரி 2025 8:55:42 PM (IST)
தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதியை அமைச்சர் கீதாஜீவன் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து, சமத்துவப் பொங்கல் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ். ரமேஷ், வட்டச் செயலாளர்கள் முக்கையா, நவநீதன், வட்ட அவைத் தலைவர் பெரியசாமி, மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணக்குமார், திருமதி. சுப்புலட்சுமி, பகுதி பிரதிநிதி கோபால், திமுக தகவல் தொழில்நுட்ப அணி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, வட்டத் துணைச் செயலாளர் வெங்கடாசலம், வட்ட பிரதிநிதிகள் பாபு, அய்யாதுரை, ரஜினி முருகன், குமார், முத்து, சிம்பு சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.