» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயிலில் இருந்து கீழே விழுந்த வாலிபர் காயம்!
சனி 18, ஜனவரி 2025 12:36:27 PM (IST)
கோவில்பட்டி அருகே கூட்ட நெரிசலில் ரயிலில் இருந்து கீழே விழுந்த கேரள வாலிபர் காயம் அடைந்தார்.
நாகர்கோவில் - பெங்களூர் விரைவு ரயில் நேற்று இரவு 10.30 மணியளவில் கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்ததும் இலுப்பையூரணி பகுதியில் சென்று கொண்டிருந்த. அப்போது ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பொதுப்பட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த சானு (35) என்பவர் ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவரது இடது தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த தோட்டத்தில் இரவு முழுவதும் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தோட்டத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறப்பு எஸ்ஐ செந்தில்முருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.