» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!
சனி 18, ஜனவரி 2025 3:30:54 PM (IST)
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8ஆவது ஊதிய குழுவை உருவாக்கி ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வரும் 2026 முதல் அமல்படுத்த வேண்டும்; கடந்த 2020 முதல் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும்; கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயதுக்கு பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டங்களை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்;
நிலையான மருத்துவ உதவி தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கே.பிச்சையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் உதயகுமாரன் கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மத்திய அரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.