» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜேசிஐ பியர்ல்சிட்டி சார்பில் புத்தாண்டு விழா
புதன் 8, ஜனவரி 2025 8:38:17 AM (IST)
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டி சார்பில் 2025 புத்தாண்டு விழா வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள எம்எஸ்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஜூனியர் ஜேசிஐ சிறுவர்கள் மற்றும் ஜேசிஐயின் கிளை இயக்கத்தினுடைய அனைத்து உறுப்பினர்களுக்குமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி பொன் விழா ஆண்டின் தலைவர் பொன்ராஜா தலைமையில் கொண்டாடினர்.
இவ்விழாவில் முன்னாள் தலைவர்கள் வில்சன் அமிர்தராஜ், ஸ்ரீதரன், மற்றும் ஜேஏசி யின் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், கிளை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர் சரவண குமார் விழாவை ஒருங்கிணைத்தார். நிறைவாக செயலாளர் செல்வ நரேஷ் நன்றியுரை வழங்கினார். இதில் ஜேசிஐ உறுப்பினர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.