» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வணிக நிறுவனங்களில் ஆய்வு: 170 கிலோ பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:10:14 AM (IST)

திருச்செந்தூரில், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள் 170 கிலோ பாலித்தீன் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத்தின் உத்தரவு, திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் கணேசன், முருகன், தமிழரசி, தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 170 கிலோ பாலித்தீன் பொருள்களைப் பறிமுதல் செய்து, வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory