» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கந்தூரி விழா: பனை ஓலையில் நேர்ச்சை உணவு வழங்கல்!

புதன் 8, ஜனவரி 2025 8:32:27 AM (IST)



தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்கா கந்தூரி விழாவில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் பனை ஓலையில் அனைவருக்கும் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.  இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முக்கிய நிகழ்வான கந்தூரி விழா இன்று அதிகாலையில் நடைபெற்றது. மகான் சேகு நூஹு ஒலி அப்பா தர்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 
 
நாட்டில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாத்திட ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மிராசா மரைக்காயர் தலைமையில் தலைமை இமாம் அப்துல் அழிம் ,  மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், இமாம் சதக்கத்துல்லா, ஆகியோர் சிறப்பு துவா ஓதப்பட்டது.   

இந்த நிகழ்ச்சியில்  ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் இப்ராகிம் மூசா,  கிரசன்ட் பள்ளி செயலாளர் முஹம்மது, உவைஸ்,  மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான்,  அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தின், பேராசிரியர்கள் இஸ்மாயில்,  செய்யது அப்பாஸ், அப்துல் கனி,  ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஆடிட்டர் ஜூபைர், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏகே மைதீன், சாகுல் ஹமீது,  காஜா மொய்தீன்,  அப்துல் காதர்,  நவரங் இஸ்மாயில், மற்றும் இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியமான பனை ஓலையில்  நேச்சை உணவு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory