» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை
திங்கள் 6, ஜனவரி 2025 8:13:38 AM (IST)
எட்டயபுரத்தில், மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் பாக்கியராஜ் (42). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அம்சராணி (40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. மேலும், தினமும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் நேற்று காலையில் வீட்டின் ஒரு அறையில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.