» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறப்பு எஸ்.ஐ-யின் பைக் திருட்டு : போலீஸ் விசாரணை
வெள்ளி 27, டிசம்பர் 2024 8:35:43 AM (IST)
தூத்துக்குடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் பைக்கை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (55). காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தெற்கு காட்டன் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றாராம். மீண்டும் வந்த போது, பைக் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக்கை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.