» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

வெள்ளி 27, டிசம்பர் 2024 9:15:27 PM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற டிசம்பர்-29,30ஆகிய இரு தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தரவுள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 29,30 ஆகிய இருதினங்களில் தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தருகிறார்.

29.12.2024 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நியோ டைட்டல் பார்க்-ஐ திறந்து வைக்கிறார். அதன்பின் மாலை 5.00 மணிக்கு சத்யா நகர், கருணாநிதி நகர் வழியாக மாணிக்கம் மஹாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடித்து காமராஜ் கல்லூரி, காமராஜர் சாலை, போல்டன்புரம், G.H.ரோடு, தென்பாகம் காவல் நிலையம், பாளை ரோடு, 3ம் மைல் வழியாக சத்யா ரிசாட் செல்கிறார்.

மறுநாள் 30.12.2024 திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் புறப்பட்டு பாளைரோடு, 3 வது மைல், V.V.D சிக்னல், சிதம்பர நகர் மெயின்ரோடு, பிரையன்ட் நகர் 1-வது தெரு கிழக்கு, காமராஜர் சாலை வழியாக காமராஜ் கல்லூரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் ”புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை துவக்கி வைக்கிறார். 

நிகழ்ச்சி முடிந்து காமராஜ் கல்லூரி, அக்சார் கம்பெனி சந்திப்பு, சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி ரோடு, பக்கிள்புரம், புதுகிராமம் கால்நடை மருத்துவமனை, ஆறுமுகச்சாமி அன்பு ஆசிரமம், ஆல்வின் ஹோட்டல், அண்ணா சாலை, பாளை ரோடு வழியாக கன்னியாகுமாரி செல்கிறார். டிச -29,30 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory