» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கல்லூரியில் பேச்சுக்கலை பயிற்சி முகாம்
வெள்ளி 27, டிசம்பர் 2024 9:05:16 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம், விருதுநகர் ரோட்டரி சங்கம், விருதுநகர் இதயம் நிறுவனங்கள் சார்பில் எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பேச்சுக்கலை பயிற்சி முகாம் நடந்தது.
ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாணவர்களிடையே பேச்சாற்றல் வளர்ப்பதற்காக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுக்கலை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி கல்லூரியில் நடந்த பயிற்சி முகாமிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் தாமோதரகண்ணன், ராஜமாணிக்கம், கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ரோட்ராக்ட் சேர்மன் ஜவகர் அனைவரையும் வரவேற்றார்.
பேச்சுக் கலை பயிற்சி முகாமினை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் தொடக்கி வைத்து பேசினார். விருதுநகர் பேச்சுக்கலை பயிற்சியாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். சிறந்த பேச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு ரோட்ராக்ட் சேர்மன் ராஜ்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பழனி குமார், இளங்கோ, முத்து முருகன், கல்லூரிபேராசிரியர்கள் விஜய கோபாலன், பிரேமலதா, பாண்டி செல்வி, ஸ்ருதி உள்பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி ரோட்ராக்ட் செயலாளர் சோனிகா நன்றி கூறினார்.