» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் நல்லகண்ணு பிறந்தநாள் விழா
வெள்ளி 27, டிசம்பர் 2024 4:38:11 PM (IST)
திருச்செந்தூரில் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் 100ஆம் பிறந்த நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பகத்சிங் பேருந்து நிலையத்தில் வைத்து கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து காெண்டனர்.