» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.10 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியர் தகவல்!

வெள்ளி 27, டிசம்பர் 2024 8:33:18 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் க.இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உழுவை வாடகைத் திட்டத்தின் இ-வாடகை செல்போன் செயலியின் மூலம் வாடகை முன்பணம் செலுத்திய 996 விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் மண் தள்ளும் இயந்திரம், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், உழுவை இயந்திரம், உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 331 தனிநபர் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், விசைத்தெளிப்பான், கதிர் அடிக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3.51 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 32 விவசாய குழுக்களுக்கு கிராம அளவிலான வேளாண் வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், பசுமை குடில், அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்ப மேலாண்மை இயந்திரங்கள், மின்மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 2,228 விவசாயிகளுக்கு சுமார் ரூ.7.70 கோடி 32 விவசாயக் குழுக்களுக்கு சுமார் ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory