» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் கடல் சீற்றம்: 2 பெண்கள் காயம்

வெள்ளி 22, நவம்பர் 2024 9:57:45 AM (IST)

திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளித்த 2 பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. எனினும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கம் போல் ஏராளமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர். அப்போது அங்கு புனித நீராடிய காரைக்குடியை சேர்ந்த சிவகாமி (50), சென்னையை சேர்ந்த கீர்த்தனா (40) என்ற 2 பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து 2 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக கடலுக்குள் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory