» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை : மேயர் உறுதி
வெள்ளி 22, நவம்பர் 2024 3:27:50 PM (IST)
தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிறது. கடந்த முறை வெள்ளத்தின் போது மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து 10 மணி நேரம் மழை பெய்துள்ளது. இதில், கடந்த முறை மழைநீர் தேங்கிய பகுதிகளில் இந்த ஆண்டு தேங்கவில்லை. ஆனால், 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கு அங்குள்ள காலி மனைகள்தான் காரணம். இது தொடர்பாக மனை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள், பாலித்தின் பைகளை போடுவதால் வடிகாலில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே, கால்வாய்களில் குப்பைகளை போடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மழைக் காலத்தை முன்னிட்டு மாநகராட்சி முழுவதும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக நடைபெற்று வருகிறது என்றார். நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டு போட்ட முட்டாள்Nov 22, 2024 - 05:00:54 PM | Posted IP 172.7*****