» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
2025ஆம் ஆண்டு பொது விடுமுறை நாள்கள் : தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, நவம்பர் 2024 4:51:04 PM (IST)
வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் 3 விடுமுறை நாள்கள் ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழக அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலில் 24 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால், பொதுவாக விடுமுறை என்பது 23 நாள்கள்.
இந்த பட்டியலின்படி, பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நாள், உழவர் நாள் என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், குடியரசு நாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருக்கிறது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 20அம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. இது மட்டுமல்லாமல், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் பொது விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த பொது விடுமுறை பொருந்தும்.
இந்த பட்டியலில், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு முதல் பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் என டிசம்பர் 25ஆம் தேதி வரை மொத்தம் 24 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 23 பொதுவிடுமுறை நாள்களில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாள், தெலுங்கு புத்தாண்டு நாள், மொஹரம் என மூன்று நாள்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துள்ளன. முக்கிய பண்டிகை நாள்கள் எதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வராததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.