» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் பிரச்சனையால் இஸ்திரி கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை!
வெள்ளி 22, நவம்பர் 2024 11:25:53 AM (IST)
தூத்துக்குடியில் வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இஸ்திரி கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் நாகராஜ் (49), இவர் அப்பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினாராம்.
ஆனால், கடந்த சில மாதங்களாக வருமானம் இல்லாததால் கடன் தவனையை செலுத்த முடியவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த நாகராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.