» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி விளாத்திகுளம் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 22, நவம்பர் 2024 12:48:31 PM (IST)



ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து விளாத்திகுளம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களுடைய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் போராட்டங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பார் அசோசியேஷன் சார்பில், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களையும், வழக்கறிஞர்கள் சமூக விரோதிகளால் கொடுரமாக கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருவதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தலைவர் சண்முகராஜ், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் மீது தொடரும் வன்முறைகளுக்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி, வழக்கறிஞர்கள் தங்களது பாதுகாப்பிற்காக தங்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வைத்து கோஷங்கள் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory