» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 22, நவம்பர் 2024 11:13:12 AM (IST)
தூத்துக்குடியில் கனமழை காரணமாக மாநகர பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கன மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் கன மழையை தொடர்ந்து எஸ்.பி.எம்., நகர், முத்து கிருஷ்ணா நகர், பி.என்.டி காலனி, அன்னை தெரசா நகர் மற்றும் பிஎம்சி பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜான் சீனிவாசன், ராமர், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
சந்திரன்Nov 22, 2024 - 01:53:50 PM | Posted IP 172.7*****
வருஷம் வருஷம் ஆய்வு தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடையாதா
கந்தசாமிNov 22, 2024 - 02:38:16 PM | Posted IP 172.7*****