» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரவு-பகல் பாராமல் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
வெள்ளி 22, நவம்பர் 2024 8:34:28 AM (IST)
தூத்துக்குடியில் இரவு-பகல் பாராமல் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், இந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி - 18வது வார்டுக்குட்பட்ட ஹரிராம் நகர் மற்றும் காந்திநகர் வள்ளலார் கோவில் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணியை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன்,உள்பட பலர் உடனிருந்தனர்