» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
வியாழன் 21, நவம்பர் 2024 8:13:40 PM (IST)
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி நாடார்கள் மகமை கே.எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைத் தலைவரும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் வழிகாட்டியுமான பொன் தனகரன் தலைமை தாங்கி உரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனத் தலைவரும், வணிகர்களின் பாதுகாவலரும், சுதேசி நாயகனுமான த.வெள்ளையன் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க முன்னாள் பொதுச் செயலாளர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார்.
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ஜவகருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் .சௌந்தர்ராஜன் (எ) ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். போட்டியின்றி பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட தெர்மல் சொ.ராஜாவுக்கு மக்கள் கண்காணிப்பதத்தின் நிர்வாக இயக்குனரும், வழக்கறிஞரும்,மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளரருமான ஹென்றி திபேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மத்திய சங்க பொருளாளர் விக்னேஷ்க்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில துணைத்தலைவர் பொன் தனகரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில அமைப்பாளரும் செயல் தலைவருமான டாக்டர் டேவிட்சன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, PUCL மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாவட்ட தலைவர் ச. தெ. செல்வராஜ், அரவிந்த் ஆட்டோ ஏஜென்சி மற்றும் ஆசீர் மாருதி உரிமையாளருமான தொழிலதிபர் ராஜ்குமார், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் தனசேகர் டேவிட்,மூத்த வழக்கறிஞருமான மாரிமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சிக்கல்.சுரேஷ் பாபு, மாவட்ட செயலாளர் முகமது அபுபக்கர், மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்திற்கு உட்பட்ட 60 கிளைச் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், மத்திய சங்கப் பிரதிநிதி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தூத்துக்குடியில் உள்ள பொது நல அமைப்புகள் இயக்கங்கள் நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். விழாவிற்கு வந்த அனைவருக்கும் விவிடி ரோடு, அண்ணா நகர், கேவிகே நகர் மேற்கு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் ஆர்.நவமணி தங்கராஜ் நன்றி உரை வழங்கினார்.