» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் வைத்து கடலில் சங்கு எடுக்க தடை: ஆட்சியர் அலுவலகத்தில் சங்குகுளி மீனவர்கள் முற்றுகை!

வியாழன் 21, நவம்பர் 2024 5:16:12 PM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பம்புகள் வைத்து கடலில் சங்குகளை எடுக்க மீன்வளத்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சங்குகுளி மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் ஆள் கடலுக்கு சென்று சங்கு எடுக்கும் தொழிலில் சுமார் 3,000 மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டு படகுகள் மூலம் சங்குகளை எடுக்க மீனவர்கள் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி கடல் பகுதியில் தோண்டி வருவதாக ஒரு பிரிவினர் மீன்வளத் துறைக்கு புகார் அளித்தனர்.  

இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் 22 ஆம் தேதி முதல் படகுகளின் அமைக்கப்பட்டுள்ள இயந்திர மோட்டார்களை அகற்ற வேண்டும் இல்லை என்றால் நாட்டுப் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மீனவள துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சங்கு எடுக்கும் மீனவர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்தமனுவில், "பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கு மேல் முறைப்படி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் தொழில் செய்து வருவதாகவும் கடல் பகுதியில் கடலுக்குள் இறந்த நிலையில் புதைந்து காணப்படும் சங்குகளை தாங்கள் எடுத்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும்  தங்களுக்கு மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் இல்லையென்றால் இதை நம்பி உள்ள பத்தாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

மீன்வளத்துறை தடையை நீக்காவிட்டால் உண்ணாவிரதம், கருப்புக்கொடி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக சங்கு எடுக்கும் மீனவர்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory