» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆளுநர் மீரான் கான் சலீம் ஆய்வு
வியாழன் 21, நவம்பர் 2024 4:32:01 PM (IST)
தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி செயல்பாடுகள் குறித்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான் கான் சலீம் ஆய்வு செய்தார்.
ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ல் சிட்டி தலைவர் விக்னேஷ், சங்க செயல்பாடுகளை பற்றி விவரித்தார். சங்கத்தின் மூலம் இதுவரை சமுதாயத்திற்கு செய்த நல உதவிகளை விவரித்தார். இன்னும் செய்யப் போகிற நலத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு சங்கம் செயல்படுவதாக கூறினார். மேலும் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்து சங்கத்தை ஆரோக்கியமாக செயல்படக் காரணம் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்,
ஆய்வுக்குப் பின் அவர் கூறுகையில் "சங்கம் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மிகச்சிறந்த நல உதவிகள், நலத்திட்டங்கள் செய்கிறீர்கள். மேலும் சிறப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக ப்ராஜெக்ட் செய்யுமாறு வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன். எங்களது துணை எப்போதும் உங்கள் சங்கத்துக்கு உண்டு என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட ஆய்வு தலைவர் ஆர்வப் பெருமாள், ஜோன் 23 துணை ஆளுநர் கண்ணன் சங்கத்தின் செயலாளர் விக்டர் மற்றும் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்..