» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நவ.24ல் மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
புதன் 20, நவம்பர் 2024 8:37:58 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு வருகிற 24-ஆம் தேதி நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 2025 மாதம் இறுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு வருகிற 24-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள சான் சான் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் 12 வயதுக்கு மேற்பட்ட, அதாவது 31.8.2012) அன்றோ, அதற்கு முன்னரோ பிறந்த வீராங்கனைகள் பங்கேற்கலாம். தேர்வில் கலந்துகொள்ளும் வீராங்கனைகள் கிரிக்கெட் வெள்ளை சீருடை, விளையாட்டு உபகரணங்கள், ஆதார் நகல் கொண்டு வர வேண்டும்.
தேர்வாகும் வீராங்கனைகள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொள்வார்கள். மேலும் விவரங்களுக்கு கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் (80156 21154), இனைச்செயளாளர் சுப்பிரமணியன் (8754004377), துனைச் செயலாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் (99448 33333) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.