» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இபி காலனியில் சீரான மின்சாரம்: மேயர் ஜெகன் பொியசாமிக்கு மக்கள் நன்றி
புதன் 20, நவம்பர் 2024 8:17:15 AM (IST)
தூத்துக்குடி இபி காலனியில் மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட மேயர் ஜெகன் பொியசாமிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள 15வது வார்டுக்குட்பட்ட இபி காலனி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பாமர் பழுதடைந்து மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக மடத்தூர் பகுதியிலிருந்து பீடர் சப்ளை மூலம் வழங்கப்பட்ட மின்சாரம் குறைந்த மின்சப்ளை இருந்ததால் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு சீராக கிடைக்கவில்லை.
இந்த தகவலை பல முறை மின்சார வாரிய சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டு ஏற்க பட்டதை உறுதி செய்து விட்டு பின்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அந்த பகுதியான இபி காலணி நல சங்கம் சார்பாக அப்பகுதி மக்கள் மின்வாாிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். செயற்பொறியாளர் இல்லாத காரணத்தினால் உதவி செயற் பொறியாளரிடம் கோாிக்கை மனுவை வழங்கினார்.
போதிய மின் மாற்றி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மேலும் மழை காலமானதாலும் ஊழியர் பற்றாக்குறையினாலும் தாமதமாகி விட்டதாகவும் விரைவில் சரி செய்யபடும் என்று உறுதியளித்தனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்தும் மனு அளித்தனர்.
அதற்கு அவர் உடனடியாக மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி சரி செய்யபடும் என்று உறுயளித்தார். அதன்படி இபி காலனி மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் பழைய நிலைக்கு வந்தது. இதனையடுத்து இபி காலனி நல சங்க தலைவர் தங்க பாண்டியன் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் அனைவரும் மேயருக்கு நன்றி தொிவித்துக்கொண்டர்.